இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் ஆர்யா, சந்தானம் மற்றும் நயன்தாரா நடிப்பில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியான படம் ‘ பாஸ் என்கிற பாஸ்கரன் ‘. காதல், நகச்சுவை பாணியில் வெளியான இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.

இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. பாஸ் என்கிற பாஸ்கரன் இந்நிலையில், 12 வருடம் கழித்து ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இப்படத்தின் இரண்டாம் பாகம் ஆர்யா, சந்தானம் கால்சீட் கொடுத்தால் நடைபெறும் எனவும் அதற்கான பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here