முன்னணி நடிகையுடன் இணையும் சமந்தா
இந்தியளவில் மிகவும் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவர் நடிகை டாப்ஸி. இவர் தமிழில் வெளிவந்த ஆடுகளம் படத்தின் மூலம் இளைஞர்களின் மனதை கொள்ளைகொண்டார்.
இப்படத்தை தொடர்ந்து காஞ்சனா, வந்தான் வென்றான், கேம் ஓவர், அனேபெல் சேதுபதி போன்ற படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், நடிகை டாப்ஸி தயாரிப்பு நிறுவனம் ஒன்றை துவங்கியுள்ளார். அதில் அடுத்ததாக தான் தயாரிக்க உள்ள படத்தில் சமந்தா கதாநாயகியாக நடிக்க வைக்கவுள்ளார் என்கிற தகவலை சமீபத்தில் ஒரு பேட்டியில் உறுதி செய்துள்ளார் டாப்ஸி.
இதன்முலம் டாப்ஸின் தயாரிப்பில் உருவாகவுள்ள படத்தில் கதாநாயகியாக நடிக்கவுள்ளார் சமந்தா என உறுதி செய்யப்பட்டுள்ளது.