சூர்யா மற்றும் பாலா இருவரும் 15 வருடங்களுக்கு பிறகு தற்போது தான் கூட்டணி சேர்ந்து இருக்கின்றனர். இந்த படத்தை தாற்காலிகமாக சூர்யா 41 என அழைத்து வருகின்றனர்.கன்னியாகுமரியில் முதற்கட்ட ஷூட்டிங் நடந்து முடிந்திருக்கும் நிலையில், சூர்யா – பாலா இடையே மோதல் எனவும், படம் ட்ராப் ஆகிறது என்றும் தகவல் பரவியது. ஆனால் சூர்யா அதை வதந்தி என கூறி முற்றுப்புள்ளி வைத்தார்.

சூர்யா - பாலா படத்தின் டைட்டில் இதுவா? வேகமாக பரவும் தகவல்

இந்நிலையில் இந்த படத்தின் அடுத்தகட்ட ஷூட்டிங் விரைவில் மதுரையில் தொடங்க இருக்கிறது. மேலும் தற்போது இந்த படத்தின் டைட்டில் பற்றியும் ஒரு தகவல் வெளியாகி வைரல் ஆகி கொண்டிருக்கிறது.வணங்கான் அல்லது கடலாடி என இந்த படத்திற்கு பெயர் சூட்ட பாலா முடிவெடுத்திருப்பதாக தகவல் பரவி வருகிறது. இருப்பினும் அதிகாரபூர்வ அறிவிப்பு வந்தால் தான் இது உறுதியாகும்.

சூர்யா - பாலா படத்தின் டைட்டில் இதுவா? வேகமாக பரவும் தகவல்

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here