கார்த்தி VS சிவகார்த்திகேயன்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரிய வரவேற்பை பெற்று வெற்றியடைந்து வருகிறது.
அந்த வகையில் டாக்டர் படத்தை தொடர்ந்து இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான டான் திரைப்படம் ரூ.100 கோடிக்கும் வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது.
இதனிடையே சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் SK20 திரைப்படத்தில் நடித்து வருகிறார். அப்படத்தை முடிக்கும் முன்பே தற்போது ரிலீஸ் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
ஆம், அதன்படி SK 20 திரைப்படமே ஆகஸ்ட் 31 ஆம் வெளியாகும் என அறிவித்துள்ளனர். டான் திரைப்படம் வெளியாகி மூன்றே மாதத்தில் அவரின் அடுத்த படத்தை களமிறக்கவுள்ளார் சிவகார்த்திகேயன்.
ஆனால் அதே ஆகஸ்ட் 31 ஆம் தேதி கார்த்தியின் விருமன் திரைப்படமும் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. கார்த்தி VS சிவகார்த்திகேயன் போட்டியில் எந்த நடிகரின் திரைப்படம் வெற்றி பெறுகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.