பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த சார்பட்டா பரம்பரை படத்தில் ஹீரோயினாக நடித்தவர் துஷாரா விஜயன். அந்த படத்திற்கு முன்பு அவர் போதை ஏறி புத்தி மாறி என்ற படத்தில் நடித்து இருந்தார்.

சார்பட்டா பரம்பரை படத்தில் அவர் மாரியம்மா ரோலில் நடித்த பிறகு அதிகம் பாப்புலர் ஆனார் துஷாரா விஜயன். தற்போது அவர் கைவசம் இரண்டு படங்கள் வைத்து இருக்கிறார்.

இந்நிலையில் தற்போது துஷாரா விஜயன் துபாய்க்கு சுற்றுலா சென்று இருக்கிறார். அங்கு அவர் தனது பக்கெட்லிஸ்டில் இருந்த ஒரு விஷயத்தை தைரியமாக செய்து இருக்கிறார். அவர் ஸ்கை டைவிங் செய்த புகைப்படங்களை தான் தற்போது அவர் வெளியிட்டு இருக்கிறார்.

“Sometimes all you need is a few minutes of insane courage and I promise you something great will come of it” என அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

Gallery Gallery Gallery Gallery Gallery

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here