பிக் பாஸ் 5ம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டவர் பாவனி ரெட்டி. அவர் விஜய் டிவியில் ரெட்டைவால் குருவி, சின்னத்தம்பி உள்ளிட்ட பல தொடர்களில் நடித்து இருக்கிறார். அவர் பிக் பாஸ் ஷோவில் பங்கேற்ற முதல் வாரத்திலேயே தான் காதலித்து திருமணம் செய்து கொண்ட கணவர் தற்கொலை செய்து கொண்டது பற்றி மிக உருக்கமாக பேசி இருந்தார். அது ஷோ பார்ப்பவர்கள் எல்லோரையுமே கலக்கமடைய வைத்தது.அதற்கு பிறகு அதே ஷோவில் வைல்டு கார்டு என்டிரியாக வந்த டான்ஸ் மாஸ்டர் அமீர் என்பவர் பாவனியிடம் தனது காதலை சொன்னார். ஆனால் பாவனி அதை ஏற்றுக்கொள்ளவில்லை.

தற்போது பாவனி மற்றும் அமீர் இருவரும் ஜோடியாக பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் ஆடி வருகின்றனர். அவர்களது நெருக்கத்தை பார்த்து இருவரும் காதலிக்க தொடங்கிவிட்டார்களா என்கிற கேள்வியை தான் நெட்டிசன்கள் கேட்டு வருகின்றனர்.

காதல்

இந்நிலையில் தற்போது பாவனி ரெட்டி ரொமான்டிக் ஆன கேண்டில் லைட் டின்னர் சாப்பிடும் போது எடுத்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். “Humans glow differently when they are treated right and loved properly #feelingloved #happyme” என அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

காதலை உணர்கிறேன் என அவர் குறிப்பிட்டு இருப்பதால் அவர் மறைமுகமாக காதலை உறுதி செய்து இருக்கிறார் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். மேலும் அந்த போட்டோவை எடுத்து அமீர் தானே எனவும் கேட்டு வருகிறார்கள்.

மேலும் மற்றொரு போட்டோவில் mine என குறிப்பிட்டு அமீர் அருகில் இருக்கும் போட்டோ ஒன்றையும் ஷேர் செய்திருக்கிறார் பாவனி.

Gallery Gallery

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here