டான் திரைப்படம் செய்த வசூல் சாதனை
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் டான்.
பெரிய எதிர்பார்ப்புகளுடன் திரைக்கு வந்த டான் திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்று பிளாக் பஸ்டர் வெற்றியடைந்துள்ளது.
திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் டான் திரைப்படத்தின் ஒட்டுமொத்த வசூல் குறித்து தயாரிப்பு நிறுவனம் மாஸ் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி டான் திரைப்படம் 12 நாட்களில் ரூ.100 கோடி வசூலை ஈட்டி சாதனை படைத்திருப்பதாக அறிவித்துள்ளது தயாரிப்பு நிறுவனம்.