ஐஸ்வர்யா ராய்
தமிழில் வெளிவந்த இருவர் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி, இன்று இந்தியளவில் முன்னணி ஹீரோயினாக வலம் வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராய்.
இவர் தற்போது மணி ரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பிரமாண்ட படைப்பு, பொன்னியின் செல்வன் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
சொத்து மதிப்பு
இந்நிலையில், நடிகை ஐஸ்வர்யா ராய்யின் முழு சொத்து மதிப்பு மட்டுமே சுமார் ரூ. 775 கோடி என்று தகவல் வெளியாகியுள்ளது.
இதில் ஐஸ்வர்யா ராய் தனது குடும்பத்துடன் வசித்து வரும் மும்பை ஜல்சா பங்களாவின் மதிப்பு மட்டுமே ரூ. 112 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.
இதுமட்டுமின்றி ஒரு படத்தில் நடிக்க ரூ. 10 கோடியும், விளம்பர படங்களில் நடிக்க ரூ. 5 முதல் 6 கோடி ஐஸ்வர்யா ராய் சம்பளம் வாங்கி வருகிறார் என்று தெரியவந்துள்ளது.