உச்ச நட்சத்திரமான தளபதி விஜய்

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய், இவரின் திரைப்படங்கள் பெரியளவில் வரவேற்பை பெற்று வருகிறது.

அதன்படி சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் என்னதான் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் பெரிய அளவில் வசூலை குவித்துள்ளது.

அப்படத்தை தொடர்ந்து விஜய் தற்போது அவரின் 66-வது திரைப்படமாக உருவாகி வரும் தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார், பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அப்பத்தில் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர்.

தளபதி விஜய் பிறந்தநாள் அன்று வெளியாகும் இரண்டு அப்டேட்ஸ் ! இப்போதே கொண்டாட ஆரம்பித்த ரசிகர்கள்..

பிறந்தாளில் அப்டேட்ஸ்

இந்நிலையில் தளபதி 66 திரைப்படம் முடியும் தளபதி 67 படத்திற்கான அப்டேட்டுகள் வெளியாகிவிட்டன. அந்த வகையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தளபதி 67 படத்தின் அப்டேட் விரைவில் வெளியாகும் என கூறியிருந்தார்.

மேலும் அடுத்த மாதம் ஜூன் 22 ஆம் தேதி விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அவர் பட அப்டேட்ஸ் வெளியாவது வழக்கம். அப்படி இந்தமுறை தளபதி 66 படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் தளபதி 67 பட அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தளபதி விஜய் பிறந்தநாள் அன்று வெளியாகும் இரண்டு அப்டேட்ஸ் ! இப்போதே கொண்டாட ஆரம்பித்த ரசிகர்கள்..

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here