சினிமா துறை மட்டுமின்றி தற்போது சின்னத்திரையில் இருக்கும் பிரபலங்கள் கூட Casting couch புகார் கூறி இருக்கின்றனர். தற்போது விஜய் டிவி சீரியல் நடிகை ஸ்ரீநிதி ஒரு பேட்டியில் தான் இந்த அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனையை பலமுறை சந்தித்து இருப்பதாக கூறி இருக்கிறார்.
விஜய் டிவியின் செந்தூரப்பூவே சீரியலில் ஹீரோயினாக நடித்து வந்தார் அவர். அந்த சீரியல் சமீபத்தில் தான் நிறைவடைந்தது. தற்போது அவர் ஒரு மலையாள சீரியலில் நடித்து வருகிறார்.
தற்போது அவர் அளித்த பேட்டியில் முன்பு தான் வாய்ப்பு தேடியபோது ஒரு பட வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. அந்த படத்தின் பிரபலம் இவரை அட்ஜஸ்ட் செய்யும்படி கேட்டிருக்கிறார்.
அவர் அட்ஜெஸ்ட் செய்யவில்லை என்றாலும் அவரது அம்மா அட்ஜஸ்ட் செய்தால் கூட போதும் என கூறினார்களாம். அதை கேட்டு தான் ஸ்ரீநிதி மட்டுமின்றி அவரது அம்மாவுக்கும் பேரதிர்ச்சியாக இருந்ததாம்.