தமிழ் சினிமாவில் முகமூடி படம் மூலமாக அறிமுகம் ஆனவர் பூஜா ஹெக்டே. அந்த படம் தோல்வி அடைந்தாலும் அதற்கு பிறகு ஹிந்தி, தெலுங்கில் நடித்து முன்னணி நடிகையாக வளர்ந்திருக்கிறார். அவர் விஜய் ஜோடியாக பீஸ்ட் படத்தில் நடித்து இருந்த நிலையில் அடுத்து பல மொழிகளில் டாப் ஹீரோ படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் பூஜா ஹெக்டே கான்ஸ் திரைப்பட விழாவில் கலந்துகொண்டார். அங்கு அவர் கவர்ச்சியான உடையில் சென்று இருந்த ஸ்டில்கள் இணையத்தில் வைரல் ஆனது.
அங்கு பூஜா ஹெக்டே சூட்கேஸ் தொலைத்துவிட்டு அதிக பிரச்சனைகளை சந்தித்தார் என்கிற தகவல் தற்போது வெளியாகி அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்து இருக்கிறது. அந்த சூட்கேசில் விலையுயர்ந்த ஆடைகள் மற்றும் மேக்கப் பொருட்கள் இருந்திருக்கின்றன.
அங்கு ஒரு சூட்கேஸ் தொலைந்துவிட்டது என்றால், அவரது குழுவினர் மும்பையிலேயே ஒரு சூட்கேஸை காரில் விட்டுவிட்டு வந்துவிட்டார்களாம். இத்தனை பிரச்சனைகள் வந்தாலும் அதை நினைத்து அழ கூட அவருக்கு நேரம் இல்லை என்றும், உடனே அங்கு வேறு பொருட்களை வாங்கி தனது மேக்கப்பை சமாளித்ததாக கூறியுள்ளார்.
பூஜா முதல் முறையாக இந்த வருடம் தான் கான்ஸ் விழாவில் பங்கேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.