அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் நடிகர், நடிகைகள் தங்களது ரசிகர்களுடன் பேசி வருவது சகஜம் தான்.
மாளவிகா மோகனன்
அப்படி நடிகை மாளவிகா மோகனனும் சமீபத்தில் ரசிகர்களுடன் கேள்வி பதில் என உரையாடி வந்துள்ளார்.
அப்போது ரசிகர் ஒருவர் மாளவிகா மோகனிடம் தவறான முறையில் கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார்.
அதில் ” மாளவிகாவின் ரசிகர்கள் என கூறுபவர்கள், நீங்கள் பதிவிடும் புகைப்படங்களை காண மட்டும் தான் உங்கள் ரசிகர் என கூறிக் கொள்கிறார்கள் ” என்று அந்த ரசிகர் கேட்டுள்ளார்.
சரியான பதிலடி
இதற்கு நடிகை மாளவிகா ” எனக்கும் அது தெரியும், அப்படி என்றால் நீங்களும் என்னுடைய புகைப்படத்தை பார்ப்பதற்காக தான் வந்தீர்களா ” என கூறி அந்த ரசிகருக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார்.