நட்சத்திர ஜோடிகள்
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் சூர்யா, இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரிய வரவேற்பை பெற்று வெற்றியடைந்து வருகிறது.
மேலும் இவர் தொடர்ந்து சிறந்த இயக்குனர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறார், அதன்படி வெற்றிமாறன், சுதா கொங்கரா, லோகேஷ் கனகராஜ் என டாப் இயக்குனர்களுடன் இணைந்துள்ளார் சூர்யா.
அதுமட்டுமின்றி கோலிவுட் திரையுலகமே எதிர்பார்க்கும் விக்ரம் படத்தில் கடைசி நிமிட முக்கிய காட்சியில் நடித்திருப்பதாகவும், அடுத்த பாகத்திற்கு சூர்யா வில்லனாக நடிக்கலாம் என தகவல் வெளியாகியிருந்தது.
இந்நிலையில் தற்போது சூர்யா மற்றும் ஜோதிகா ஜோடியாக மும்பைக்கு சென்றுள்ளனர், அங்கு அவர்கள் ரசிகர் ஒருவருடன் எடுத்துக்கொண்ட போட்டோவும் வெளியாகியுள்ளது. அவர்கள் அங்கு என்ன காரணத்திற்காக சென்றுள்ளனர் என தெரியவில்லை.
இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்..