விஜய் தொலைக்காட்சியில் கடைசியாக பிக்பாஸ் 5வது சீசன் ஒளிபரப்பாகி இருந்தது, அதற்பிறகு அல்டிமேட் நிகழ்ச்சி.
இந்த 5வது சீசனில் ஜோடிகளாக பார்க்கப்பட்டவர்கள் பாவ்னி மற்றும் அமீர். ஆனால் இவர்கள் வெளியே வந்தும் நாங்கள் நல்ல நண்பர்கள் மட்டும் தான், வேறு எதுவும் இல்லை என கூறி வருகிறார்கள்.
தற்போது இவர்கள் இருவரும் இணைந்து பிக்பாஸ் ஜோடிகள் சீசன் 2ல் பங்குபெற்று வருகிறார்கள்.
இந்நிகழ்ச்சியின் நடுவர்களாக ரம்யா கிருஷ்ணன் மற்றும் சதீஷ் உள்ளார்கள். சமீபத்தில் தான் நிகழ்ச்சி தொடங்கியது, அதற்குள் போட்டியில் ஜெயிக்க வேண்டும் என அமீர், பாவ்னியை கடுமையாக தயார் செய்கிறார்.
பாவ்னி வெளியிட்ட வீடியோ
அதில் பாவ்னியை அமீர் மிகவும் கடுமையாக பிழிந்து எடுக்க அவரோ இவரை மாற்றுவதற்கு என்ன விதிமுறை என்று பதிவு போட்டு வீடியோ போட்டுள்ளார்.