ரஜினியின் பேட்ட படத்தில் ஒரு சின்ன ரோலில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் மாளவிகா மோகனன். அதற்கு பிறகு அவர் தளபதி விஜய் ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்து இருந்தார். அதற்கு அடுத்து அவர் தனுஷின் மாறன் உள்ளிட்ட சில படங்களில் நடித்து உள்ளார்.
நேற்று மாளவிகா மோகனன் ட்விட்டரில் ரசிகர்கள் உடன் உரையாடினார். அப்போது பல கேள்விகளுக்கு ஓப்பனாக பதில் கூறினார் அவர்.
அப்போது ஒருவர் மாளவிகாவை ட்ரோல் செய்யும் வகையில் பதிவிட்டு இருந்தார். “நீ நடிப்பில் மோசம் என்பது எல்லோருக்கும் தெரியும், உங்க கவர்ச்சி போட்டோஸுக்கு தான் சோசியல் மீடியாவில் ரசிகர்கள் இருக்கிறார்கள்” என கூறி இருக்கிறார் அந்த நபர்.
அதற்கு பதில் கொடுத்த மாளவிகா ‘நீயும் என்னை follow செய்கிறார். அதனால் நீயும் அப்படி தானா” என குறிப்பிட்டு இருக்கிறார்.