இசையமைப்பாளர் டி.இமான் சில தினங்கள் முன்பு இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். அவரது முன்னாள் மனைவி மோனிகா தற்போது திருமண வாழ்த்து சொல்லி ட்விட்டரில் பதிவிட்டு உள்ளார். அதில் இமானை கடுமையாக விமர்சித்து இருக்கிறார் அவர்.

“டியர் டி.இமான். உங்கள் இரண்டாம் திருமணத்திற்காக வாழ்த்துக்கள். ஒருவர் வாழ்க்கையில் 12 வருடங்கள் இருந்த ஒருவரை இவ்வளவு விரைவாக மாற்ற முடியும் என்றால், உங்களை போன்ற ஒருவருக்காக நேரத்தை வீணடித்தது என் முட்டாள்தனம். அதற்காக வருத்தப்படுகிறேன்.”

“கடந்த இரண்டு வருடங்களாக உங்கள் சொந்த குழந்தைகளை நீங்கள் பார்க்கவும் இல்லை, தற்போது அவர்களுக்கும் மாற்று கண்டுப்பிடித்துவிட்டீர்களா? எது நடந்தாலும் என் குழந்தைகளை உன் அப்பாவிடம் இருந்து நான் பாதுகாப்பேன். தேவைப்பட்டால் நான் புது குழந்தையையும் பாதுகாப்பேன். Happy married life.”

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here