AK 61
அஜித் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் மூன்றாவது முறையாக நடித்து வருகிறார்.
நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களை தொடர்ந்து AK 61 படத்தையும் போனி கபூர் தான், தயாரிக்கிறார்.
பிரம்மாண்ட செட் அமைத்து இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.
உறுதி செய்த தயாரிப்பாளர்
மேலும், இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியரிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது.
இந்நிலையில், இப்படத்தில் மஞ்சு வாரியார் தான் கதாநாயகியாக நடிக்கிறார் என்று தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரப்பூர்வமாக பேட்டியில் கூறிவிட்டார்.