நடிகர் விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் 13ம் தேதி வெளியாகி இருந்தது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தை அனிருத் இசையமைக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.
படம் ரூ. 210 கோடி வரை வசூலித்து நஷ்டத்தை முடிந்துவிட்டது.
இது ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தத்தை தான் கொடுத்தது, ஆனால் படத்தில் இடம்பெற்ற காட்சிகளை பலர் கலாய்த்து வருகிறார்கள்.
பைலட் போட்ட பதிவு
இந்த நிலையில் நிஜ பைலட் அதிகாரி சிவராமன் சஜன் என்பவர் விஜய்யின் பீஸ்ட் பட சில காட்சிகளை போட்டு இதில் எனக்கு நிறைய கேள்விகள் உள்ளது என பதிவு போட்டுள்ளார்.
அந்த விமான காட்சிகள் பார்க்க லாஜிக்கே இல்லாமல் இருக்கிறது என போட இதுவரை அந்த வீடியோவை 2, 45, 000க்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். அதற்கு பலரும் தனது விமர்சனங்களை கொடுத்து வர மிகவும் வைரலாகி வருகிறது.
இதோ அந்த பைலட் போட்ட பதிவின் வீடியோ,