நடிகை நிஷா கணேஷ் முதன்முதலில் தனது நடிப்பை கனா காணும் காலங்கள் தொடரில் தொடங்கினார். அதன்பிறகு தொடர்ந்து தொடர்கள் நடித்துவந்த நிஷா இடையில் திருமணம் குழந்தை என செட்டில் ஆனார்.

நிஷா நடித்த சீரியல்கள்

கனா காணும் காலங்கள், வள்ளி, தெய்வமகள், ஆபிஸ், சரவணன் மீனாட்சி, மகாபாரதம். தலையனை பூக்கள், நெஞ்சம் மறப்பதில்லை என நடித்தார். இடையில் நிஷாவிற்கு கணேஷ் என்ற நடிகருடன் திருமணம் நடக்க இருவருக்கும் இப்போது ஒரு பெண் குழந்தையும் உள்ளது.ச

4 வருடத்திற்கு பிறகு மீண்டும் நடிக்க வந்த நடிகை நிஷா கணேஷ்- இந்த சீரியலிலா?

மீண்டும் நடிக்க வந்த நிஷா

2018ம் ஆண்டு நெஞ்சம் மறப்பதில்லை தொடரில் இருந்து பாதியில் வெளியேறிய நிஷா அதன்பிறகு சீரியல்களில் காணவில்லை. 2020ம் ஆண்டு திருமகள் தொடரில் சின்ன வேடத்தில் நடித்தார் அவ்வளவு தான்.

தற்போது அவர் ஜீ தமிழில் மிகவும் ஹிட் சீரியலான செம்பருத்தி தொடரில் வக்கீலாக நடிக்க இருக்கிறார். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள் நிஷாவிற்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here