பிரபலங்களுக்கு நல்லது நடந்தாலும், கெட்டது நடந்தாலும் முதலில் சந்தோஷப்படுவதும், துக்கப்படுவதும் ரசிகர்கள் தான். அதிலும் சோகமான விஷயங்கள் நடந்துவிட்டால் அதைப்பற்றியே சமூக வலைதளங்களில் பலர் அதிகம் பேசுவார்கள்.
பல்லனி தே மரணம்
கடந்த வியாழக்கிழமை சஹானா என்ற நடிகை இறந்த செய்தி வந்தது, அந்த துக்கத்தில் இருந்தே ரசிகர்கள் வெளிவரவில்லை. தற்போது இன்னொரு சீரியல் நடிகையின் மரண செய்தி வெளிவந்துள்ளது.
பெங்காலி சீரியல்களில் அதிகம் நடித்துள்ள பல்லவி நேற்று தனது வீட்டில் பெட்ரூமில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். இவர் சாக்ணிக் சக்ரபோர்ட் என்பவருடன் லிவிங் ரிலேஷனில் இருந்துள்ளார்.
தற்போது பல்லவியின் பெற்றோர் மற்றும் சாக்ணிக்கையும் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள். மே 12ம் தேதி கூட தனது சீரியலில் சந்தோஷமாக தான் பல்லவி நடித்து முடித்திருக்கிறார், அதற்குள் என்ன ஆனது என அவரது நண்பர்கள் வட்டாரத்தில் இருப்பவர்களே அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.