நடிகர் சிம்புவை திருமணம் செய்து கொள்ள தயார் என்று சீரியல் நடிகை ஒருவர் வெளிப்படையாக கூறியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீரியல் நடிகை ஸ்ரீநிதி

கடந்த 2012ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பான 7 ஆம் வகுப்பு சி பிரிவு அல்லது 7சி என்ற சீரியலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஸ்ரீநிதி. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் சீரியலுக்கு பிறகு இந்த சீரியல் மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

இதனை தொடர்ந்து, அடுத்தடுத்து இவரது நடிப்பு திறமையால், ரோமாபுரி பாண்டியன், பகல் நிலவு, வள்ளி என பல சீரியல்களில் நடித்து நடித்துள்ளார். அதுமட்டுமின்றி, இவர் ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி என்ற சீரியலில் ஜனனி என்ற கதாபாத்திரத்தில் நடித்து பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார்.

சினிமாவில் நடித்து பிரபலம் ஆகும், நடிகைகளுக்கு இணையாக சீரியல் நடிகைகள் மக்கள் மத்தியில் இடம் பிடித்து பிஸியான நடிகையாக வலம் வருகின்றனர். அந்த வரிசையில், தற்போது சின்னத்திரையில் பிரபல நடிகைகளில் ஒருவராக இருப்பவர் ஸ்ரீநிதி.

சிம்புவை திருமணம் செய்ய தயார்! பிரபல நடிகை ஓபன் டாக்

சிம்புவை திருமணம் செய்ய தயார்

இவர், சமீபத்தில் தான் வலிமை படம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்து, சர்சையில் சிக்கி கொண்டார். அதற்கு பிறகு சில மாதங்கள் கழித்து தான் மன அழுத்தத்தில் இருப்பதாக அழுது கொண்டே வீடியோ வெளியிட்டார். இந்நிலையில், சிம்புவை திருமணம் செய்ய ரெடி என ஸ்ரீநிதி இன்ஸ்டாவில் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

அதில் அவர் ‘ஒரு நாள் அனைவரும் திருமணம் செய்து கொள்வார்கள். நானும் சிம்புவும் மட்டும் தான் மீதம் இருப்போம்’ போல என குறிப்பிடப்பட்டு மீம் ஒன்றை பகிர்ந்திருந்தார்.அந்த பதிவை பார்த்து நெட்டிசன் ஒருவர் நீங்கள் இருவரும் திருணம் செய்து கொள்ளலாமே என்று கேள்வி எழுப்ப, அதற்கு ஸ்ரீநிதி ‘இருவரும் திருமணம் செய்து கொண்டால் நல்லாத்தான் இருக்கும். ஆனால், எனக்கு தற்போது ஆள் இருக்கே’ என தெரிவித்து உள்ளார். தற்போது அவரின் இந்த ஸ்டேட்டஸ் இணையத்தில் செம்ம வைரலாக பரவி வருகிறது.

சிம்புவை திருமணம் செய்ய தயார்! பிரபல நடிகை ஓபன் டாக்

சிம்புவை திருமணம் செய்ய தயார்! பிரபல நடிகை ஓபன் டாக்

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here