விக்ரம் ஆடியோ லான்ச்

உலகநாயகன் கமல் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் விக்ரம்.

விஜய் சேதுபதி, பகபத் பாசில் உள்ளிட்ட நடிகர்கள் கமலுடன் இணைந்து நடித்துள்ளதால் அனைவரும் இப்படத்தை பெரியளவில் எதிர்பார்த்து இருக்கின்றனர்.

அதுமட்டுமின்றி சமீபத்தில் கூட இப்படத்தில் நடிகர் சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக தகவல்கள் பரவின. கிட்டத்தட்ட அந்த தகவல்கள் உண்மையெனவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று விக்ரம் படத்தில் இசை மற்றும் ட்ரைலர் வெளியிட்டு விழா நடக்கவுள்ளது, இதற்காக அனைத்து ரசிகர்களும் வெறித்தனமாக காத்து கொண்டு இருக்கின்றனர்.

மேலும் தற்போது விக்ரம் பட விழாவை பிரபல தொகுப்பாளர் DD தான் தொகுத்து வழங்க இருக்கிறார். இதனை DD-யே அவரின் சமூக வலைதள பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here