கிளாமர் கதாபாத்திரங்கள் குறித்து கீர்த்தி சுரேஷ் :
நடிகை கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர், தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார்.
இவர் நடிப்பில் சமீபத்தில் சர்க்காரு வாரிப்பட்டா, சாணி காயிதம் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகியிருந்தது. இதில் சாணி காயிதம் படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்த தைரியமான காதாபாத்திரம் பெரியளவில் பேசப்பட்டது.
மேலும் தற்போது மிகவும் ஸ்லிமாகவும் திரைப்படங்களில் முன்பு இல்லாமல் கிளாமர் காட்டுவது குறித்தும் அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
அதற்கு அவர் “நான் கிளாமர் ரோலில் நடிக்க மாட்டேன்னு சொன்னதே இல்லை. நான் சொன்னதை தப்பாக புரிந்து கொண்டார்கள். கிளாமர் என்று நான் சொன்னது கவர்ச்சி காட்டும் ஒரு அடையும் நான் அணியமாட்டேன்.
என்னை அழகாக காட்டும் ஆடையை தான் எப்பவுமே அணிவேன். என்னை எப்போதும் அழகாக காட்டிக்க மட்டுமே நான் நினைத்தேன், ஆனால் கவர்ச்சி காட்ட ஒரு போதும் நினைத்ததில்லை” என பேசியுள்ளார் கீர்த்தி சுரேஷ்.