விஜய்யை சாதனையை முந்திய கமல்

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் பீஸ்ட், இப்படத்தில் இடம் பெற்ற அரபிக் குத்து எந்தளவிற்கு வரவேற்ப்பை பெற்றது என அனைவருக்கும் தெரிந்த விஷயம்.

இணையதளத்தை பார்த்தாலே அரபிக் குத்து பாடல் தான் நிரம்பியிருக்கும், மேலும் யூடியூபில் தற்போது வரை 393 மில்லியன் பார்வைகளை அப்பாடல் பெற்றுள்ளது.

ஆனால் தற்போது சென்சேஷனல் ஹிட்டான அரபிக் குத்து பாடல் சாதனையை முறியடித்துள்ளது கமலின் பத்தல பத்தல பாடல்.

ஆம், அரபிக் குத்து பாடல் மூன்று நாளில் யூடியூப்பில் 16 மில்லியன் பார்வைகளை பெற்றது, ஆனால் பத்தல பத்தல பாடல் மூன்று நாளில் 17 மில்லியன் பார்வைகளை குவித்து அசைக்க முடியாத அரபிக் குத்து பாடல் சாதனையை முறியடித்துள்ளது.

அசைக்க முடியாத விஜய்யின் சாதனையை ஒரே பாட்டில் முறியடித்த கமல் !

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here