USA-ல் வசூலை குவித்து வரும் டான் திரைப்படம்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் நேற்று வெளியான திரைப்படம் டான்.
பெரிய எதிர்பார்ப்புடன் நேற்று வெளியாகியுள்ள இப்படம் அனைவரிடமும் நல்ல விமர்சனங்களை பெற்று வசூல் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.
அதன்படி இப்படம் சிவகார்த்திகேயன் திரைப்பயணத்தில் சீமராஜா திரைப்படத்திற்கு அடுத்தபடியாக இப்படம் தான் தமிழ்நாட்டில் பெரிய ஓப்பனிங்கை பெற்றுள்ளதாம்.
இந்நிலையில் தற்போது டான் திரைப்படம் தமிழ்நாட்டில் வசூல் சாதனை செய்வது மட்டுமின்றி மற்ற இடங்களிலும் வசூலை குவித்து வருகிறது.
அதன்படி டான் USA-வில் கிட்டத்தட்ட 125K $ வசூலை குவித்துள்ளதாம், மேலும் டாக்டர் திரைப்படம் அங்கு மொத்தமாகவே 547K $ தான் வசூல் ஈட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.