கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி கடந்த சில வருடங்களுக்கு முன்பு தான் தமிழில் தொடங்கப்பட்டது.
பிப்ரவரி 2020ம் ஆண்டு இந்த தொடர் நவீன் மற்றும் ஹீமா பிந்து ஆகியோரின் நடிப்பில் தொடங்கப்பட்டது. Jeev Zala Yeda Pisa என்ற மராத்தி தொடரில் ரீமேக் தான் இந்த இதயத்தை திருடாதே தொடர்.
தொடர் பற்றிய விவரங்கள்
ராதாகிருஷ்ணன் என்பவர் இயக்கியிருக்கும் இந்த தொடர் 2 பாகங்கள் வரை ஓடியுள்ளது. தற்போது இரண்டாவது பாகமும் முடிவுக்கு வந்துள்ளது, ஆனால் விரைவில் 3வது சீசன் தொடங்கும் என சீரியல் குழு தெரிவித்துள்ளார்கள்.
2வது சீசனோடு நடிகை ஹீமா பிந்து தொடரில் இருந்து விலகுகிறார், இந்த தகவல் ரசிகர்களுக்கு கொஞ்சம் சோகத்தை கொடுத்தது. தற்போது 2வது சீசன் இறுதி நாள் படப்பிடிப்பு சமீபத்தில் நடந்துள்ளது.
கடைசி நாளின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வெளியாக ரசிகர்கள் வி மிஸ் யூ டீம் என தங்களது சோகத்தை கமெண்ட்டா போட்டு வருகிறார்கள்.