மலையாள நடிகை மஞ்சு வாரியர் அசுரன் படத்திற்கு பிறகு தற்போது அஜித்தின் அடுத்த படமான ஏகே61 படத்தில் நடிக்கிறார். அஜித் இரண்டு ரோல்களில் நடிப்பதாக சொல்லப்படும் இந்த பிரம்மாண்ட படத்தின் ஷூட்டிங் தற்போது ஐதராபாத்தில் செட் அமைத்து நடைபெற்று வருகிறது. சென்னை மவுண்ட் ரோடு போலவே அங்கு செட் அமைத்து இருக்கிறார்களாம்.
இந்த படத்தில் அஜித் ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்கிறார் என சமீபத்தில் தான் உறுதியான தகவல் வந்தது. இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மஞ்சு வாரியார் அஜித் படம் பற்றிய கேள்விக்கு பதில் கூறி இருக்கிறார்.
ஏகே61 படத்தில் நடிப்பதை உறுதி செய்த அவர் இது அதிகம் நம்பும் ப்ராஜக்ட் என கூறி இருக்கிறார்.
வீடியோ இதோ..