செய்தி வாசிப்பாளராக இருந்து நடிகையாக களமிறங்கி தற்போது கோலிவுட்டில் வேகமாக வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார் பிரியா பவானி ஷங்கர்.
தொடர்ந்து படங்களில் பிஸியாக இருந்தாலும் பிரியா பவானி இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் உரையாட மறப்பதில்லை. அவ்வப்போது ரசிகர்களின் கேள்விகளுக்கு இன்ஸ்டாவில் பதில் சொல்லி வருகிறார் அவர். சமீபத்தில் அவரிடம் உள்ளாடை சைஸ் என்ன என ஆபாச கேள்வி கேட்ட ஒரு நபருக்கு பதிலடி கொடுத்திருந்ததும் இணையத்தில் வைரல் ஆனது.
டேட்டிங்
இந்நிலையில் டேட்டிங் செல்வது பற்றி ஒரு விஷயத்தை அவர் பகிர்ந்து இருக்கிறார். அதிகம் மெச்சூர் ஆக இருக்கும் நபர்களுடன் டேட்டிங் செல்வது கடினம் என கூறி இருக்கிறார் அவர்.
எதாவது சண்டை வந்தால் உடனே அவர் மன்னிப்பு கேட்டு விடுவார், அந்த கோபத்தை வைத்துக்கொண்டு அதற்கு பின் நான் என்ன செய்ய முடியும் எனவும் கேட்டிருக்கிறார் அவர்.