நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்து நடித்து இருக்கும் டான் படத்தின் ட்ரைலர் நேற்று வெளியிடப்பட்டது. அதற்காக ஒரு பிரம்மாண்ட விழா நடைபெற்றது. அதில் படக்குழுவினர் மற்றும் நடிகர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.
டான் ட்ரைலரும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. கல்லூரியில் ரகளை செய்யும் ஒரு மாணவராக தான் சிவகார்த்திகேயன் அந்த ட்ரைலரில் காட்டப்படுகிறார்.
மேலும் ஒரு காட்சியில் ‘ஆசிரியர்களை டார்ச்சர் செய்வது எப்படி’ என்கிற புத்தகத்தை சிவகார்த்திகேயன் கையில் வைத்து படித்துக்கொண்டிருப்பார். .
சமீபத்தில் தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்கள் சிலர் ஆசியர்களை தகாத வார்த்தைகளில் திட்டி தாக்க முற்படும் வீடியோ இணையத்தில் வைரல் ஆனது.
ஏற்கனவே நாட்டில் மாணவர்கள் இப்படி இருக்கும் நிலையில் சிவகார்த்திகேயன் அவர்களை ஊக்கப்படுத்தும் விதத்தில் இப்படி படம் எடுத்திருப்பது சரியா என நெட்டிசன்கள் பலரும் சிவகார்த்திகேயனை திட்டி வருகின்றனர்.