கடந்த மாதம் ரிலீஸ் ஆன விஜய்யின் பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து இருந்தார் நடிகை பூஜா ஹெக்டே. அவருக்கு இது இரண்டாவது தமிழ் படம்.

இதற்கு முன்பு ஜீவா ஜோடியாக முகமூடி படத்தில் பூஜா நடித்து இருந்தார். அந்த படம் பிளாப் ஆனதால் அதற்கு பிறகு தமிழ் பக்கமே வராமல் இருந்த அவரை பீஸ்ட் படத்திற்காக மீண்டும் கோலிவுட்டுக்கு வர வைத்தனர். ஆனால் இந்த படமும் நெகட்டிவ் விமர்சனங்களை தான் அதிகம் பெற்று இருக்கிறது. இருப்பினும் அதை எல்லாம் தாண்டி 250 கோடி ரூபாய் வசூல் சாதனை படைத்து இருக்கிறது.

தொடர்ந்து பூஜா சமீபத்தில் நடிக்கும் படங்கள் ராதே ஷியாம், பீஸ்ட், ஆச்சார்யா என தோல்வியை சந்தித்து வருவதால் அவரது மார்க்கெட் சரிவை சந்தித்து வருகிறது.

இந்நிலையில் அடுத்து பூஜா ஹெக்டே விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக JGM படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாக உள்ளது இந்த படம்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here