விஜய் டிவியில் பல காமெடி நிகழ்ச்சிகளில் கலக்கி வருபவர் நாஞ்சில் விஜயன். சிரிச்சா போச்சு ஷோவில் அவர் லேடி கெட்டப்பில் நடித்த காமெடி காட்சிகள் ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்திருக்கும்..
அவருக்கு மிக அதிக அளவில் ரசிகர்களும் இருக்கிறார்கள்.
கார் வாங்கி இருக்கிறேன்
தற்போது நாஞ்சில் விஜயன் புது கார் ஒன்றை வாங்கி இருக்கிறார். அதன் வீடியோவை அவர் இஸ்டாக்ராமில் பகிர்ந்து இருக்கிறார்.
பெரிய கனவுடன் சென்னைக்கு வரும்போது நான் ரயிலில் பாத்ரூம் அருகில் அமர்ந்து வந்தேன். அது இப்போதும் எனக்கு நினைவு இருக்கிறது. தற்போது இப்படி வளர்ந்து இருப்பது எனக்கு கனவு நினைவானது போல இருக்கிறது.
“எதுவும் முடியாதது இல்லை. உங்கள் ஆசீர்வாதம் எப்போதும் தேவை மக்களே” என அவர் கூறி இருக்கிறார்.