விஜய் தொலைக்காட்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற தொடர் படு பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கிறது. 3 வருடங்களுக்கு மேலாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த தொடருக்கு விஜய் டெலிவிஷன் விருதும் கிடைத்தது.

இந்த சீரீயலுக்கான ஸ்பெஷல் என்னவென்றால் தமிழிலேயே உருவான ஒரு கதை, அதோடு பல சீரியல்கள் குடும்பத்தை பிரிப்பது போல் காட்டப்பட இந்த தொடரால் பல குடும்பங்கள் இணைந்துள்ளது என்றே கூறலாம்.

தற்போதைய கதை

இப்போது கதையில் குடும்பத்தில் இருக்கும் அனைவரது கவனமும் முல்லை மீது தான் உள்ளது. காரணம் அவர் குழந்தை பிறக்க லட்ச கணக்கில் செலவு செய்து சிகிச்சை பெற கடைசியில் அது தோல்வியில் முடிந்துள்ளது.

இது குடும்பத்தில் இருக்கும் அனைவருக்கும் கடும் சோகத்தை தந்துள்ளது. அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பது தெரியவில்லை.

அதிரடி தகவல்

தற்போது சீரியல் குறித்து ஒரு அதிரடி தகவல் சமூக வலைதளங்களில் உலா வருகிறது. அதாவது சீரியல் தொடங்கும் போது முதலில் முல்லை வேடத்தில் நடித்து வந்தவர் சித்ரா, அவர் இறந்ததால் அவருக்கு பதில் முல்லையாக காவ்யா நடித்து வந்தார்.

இப்போது என்னவென்றால் காவ்யாவிற்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்க அவர் வெளியேற இருப்பதாக கூறப்படுகிறது.

புதிய முல்லையாக சமீபத்தில் குழந்தை பெற்ற நடிகை ஆல்யா மானசா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here