நடிகை ஷிவானி நாராயணன் சின்னத்திரையில் நடித்து பாப்புலர் ஆனதை விட அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான டான்ஸ் வீடியோ வெளியிட்டு பெரிய அளவில் பாப்புலர் ஆனது தான் அதிகம்.
மேலும் அவர் பிக் பாஸ் 4ம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு மேலும் பாப்புலர் ஆனார். அதற்கு பிறகு அவருக்கு சில படவாய்ப்புகளும் கிடைத்திருக்கிறது.இந்நிலையில் ஷிவானி தற்போது கையில் மாலை உடன் போட்டோ வெளியிட்டு இருக்கிறார். அப்படி என்ன விசேஷம் என பார்த்தால் ஷிவானிக்கு இது 21வது பிறந்தநாளாம், அதனால் அவர் கோவிலுக்கு சென்று இருக்கிறார். அப்போது அவரிடம் சாமி மாலையை கொடுத்து இருக்கின்றனர். அந்த போட்டோக்கள் தான் அது.
மேலும் ஷிவானி பாலாஜி முருகதாஸ் உடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடி இருக்கும் வீடியோவும் இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.