உச்ச நட்சத்திரமான விஜய்

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரிய வசூல் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.

அப்படி அண்மையில் வெளியான பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், தமிழகத்தில் பெரிய வசூல் சாதனைகளை செய்திருக்கிறது.

இந்நிலையில் நடிகர் விஜய் மற்றும் அவரின் தந்தை SAC குறித்த சர்ச்சை எப்போதும் உண்டு, இவர்களுக்கு உள்ள பிரச்சனை ரசிகர்கள் மன்றத்தை அரசியல் காட்சியாக மாற்ற SAC பதிவு செய்ததில் இருந்து பெரிதாக பேசப்பட்டது.

கண்கலங்கிய SAC

 

அதனை தொடர்ந்து SAC தனது மகன் விஜய் குறித்து பேசிவருவதை பார்த்து வருகிறோம், மேலும் SAC அளித்துள்ள சமீபத்திய பேட்டியொன்றில் விஜய் குறித்து மனமுடைந்து கண்கலங்கியுள்ளார்.

அதில் மாதத்திற்கு ஒரு முறையாவது வந்து விஜய் எங்களை சந்திக்க வேண்டும், அவர் வந்து எங்களை ஹாய் பா, ஹாய் மா என சொல்லி எங்களில் தோள்களில் தட்டி கொடுக்க வேண்டும்.

அவர் இவ்வளவு பிஸியாக இருந்து மாதத்திற்கு ஒரு முறை வந்து எங்களிடம் ஒரு அரைமணி நேரமாவது பேச வேண்டும் என மனமுடைந்து கண்கலங்கியுள்ளார் SAC.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here