கேடி பில்லா கில்லாடி ரங்கா, மாநகரம் போன்ற படங்களில் நடித்து இருப்பவர் நடிகை ரெஜினா. அவருக்கு தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு இருக்கும் நிலையில் கைவசம் பல படங்கள் தற்போது வைத்து இருக்கிறார்.
இன்ஸ்டாகிராமில் 1.8 மில்லியன் ரசிகர்களை கொண்டு இருக்கும் ரெஜினா தற்போது செய்திருக்கும் செயல் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.
அவர் மதுபான விளம்பரத்தில் நடித்து இருக்கிறார். அதன் போட்டோவை ரெஜினா இன்ஸ்டாவில் பதிவிட ‘காசுக்காக இப்படியும் செய்வீங்களா’ என கோபத்துடன் நெட்டிசன்கள் கேட்டு வருகின்றனர்.