விஜய் ரசிகர்களின் மன குமுறல்

நடிகர் விஜய் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரியளவில் வரவேற்பை பெற்று வருகிறது.

ஆனால் அவர் நடிப்பில் கடைசியாக வெளியான பீஸ்ட் திரைப்படம் அதிகமாக கலவையான விமர்சனங்களையே பெற்றிருந்தது.

இந்நிலையில் தற்போது அவரின் ரசிகர்கள் சிலர் விஜய்யாக இருப்பது இவ்வளவு கஷ்டம் என்பதை ஒரு போஸ்டரின் மூலம் தெரிய வைத்துள்ளனர்.

ஆம், அதில் “இவர் ஏதாவது அவார்ட் வாங்குனா, சாதாரண அவார்ட் என்பார்கள். ஏதாவது உதவி செய்தால் : பப்லிசிட்டிகாக என்பார்கள், மக்களுக்காக குரல் கொடுத்தால் : அரசியல் ஆசை என்பார்கள்,

மக்கள் பிரச்சனையில் தலையிடாமல் இருந்தால் : கோடியில் புரளும் நடிகன் வாய்திறக்காமல் இருக்கிறார், படம் நல்லா இருந்தா : இது எங்கள் மதத்திற்கு எதிரான படம்,

டைரக்டர் காப்பி, லாஜிக் இல்லாத படம், இப்படி என்ன பண்ணாலும் அவரை சொல்றதுக்குனே ஒரு கூட்டம் இருந்து கொண்டே தான் இருக்கும்” என விஜய் ரசிகர்கள் தங்களின் மன குமுறலை போஸ்டரின் மூலம் தெரிவித்துள்ளனர்.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here