நடிகை த்ரிஷா இன்று அவரது 39வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
த்ரிஷா
தமிழ் சினிமாவில் கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார் த்ரிஷா. இத்தனை வருடங்கள் அதே லுக்கில் இருக்கும் அவரது பிட்னெஸ் சீக்ரெட் தான் என்ன என எல்லோருக்கும் ஆச்சர்யப்படும் அளவுக்கு இருந்து வருகிறார்.
திருப்பதியில் சாமி தரிசனம்
இன்று த்ரிஷா தனது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அம்மாவுடன் சென்று சாமி தரிசனம் செய்திருக்கிறார். அதன் பின் அங்கு ரசிகர்கள் உடன் செல்பி எடுத்துக்கொண்டிருக்கிறார்.
அதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.