நடிகை எமி ஜாக்சன் மதராசப்பட்டினம் என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். அதன்பிறகு எமி ஜாக்சனுக்கு எல்லாமே அதிரடி விஷயங்கள் தான் நடந்தது.

விஜய், ரஜினி, தனுஷ் என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்த எமி ஜாக்சன் தெலுங்கு மற்றும் பாலிவுட்டிலும் கலக்கி வந்தார். கடைசியாக அவரது நடிப்பில் ரஜினியுடன் நடித்த 2.0 படம் தான் வெளியாகி இருந்தது.

எமி ஜாக்சன் திருமணம்

எமி ஜாக்சன் ஜார்ஜ் என்பவரை காதலித்து, நிச்சயதார்த்தம் செய்து 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒரு மகனையும் பெற்றார். 2020ல் இருவருக்கும் திருமணம் நடைபெறும் என கூறப்பட்ட நிலையில் 2021ம் ஆண்டு இருவரும் பிரிந்துவிட்டார்கள் என்ற செய்தி வந்தது.

 

புதிய காதலன்

தற்போது எமி ஜாக்சன் எட் வெஸ்ட்விக் என்பவரை காதலித்து வருவதாகவும் இருவரும் அடிக்கடி வெளியே ஒன்றாக செல்வதாக கூறப்படுகிறது. கடந்த 2 மாதங்களாக இவர்கள் ஒன்றாக இருப்பதாக சில ஹாலிவுட் பத்திரிக்கைகளில் கூறப்படுகிறது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here