கன்னட சினிமா நடிகர் யஷ் இப்போது தென்னிந்திய சினிமா ரசிகர்கள் கொண்டாடும் நாயகனாக வளர்ந்துவிட்டார், அதற்கு காரணம் Kgf 2 திரைப்படம். இரண்டாம் பாகம் ஏப்ரல் 14ம் தேதி வெளியாகி வசூல் வேட்டை நடத்துகிறது.

உலகம் முழுவதும் இதுவரை ரூ. 1000 கோடிக்கு மேல் வசூலித்து வருகிறது, தமிழகத்தில் இன்னும் சில தினங்களில் ரூ. 100 கோடியை எட்டிவிடும் என்கின்றனர்.

இந்த வசூல் அஜித், விஜய் படங்களின் சாதனைகளுக்கே சவால் விடும் போல் தெரிகிறது.

யஷ் சொத்து மதிப்பு

Kgf 2 படத்திற்காக யஷ் ரூ. 20 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இப்படம் மூலம் மாஸ் நாயகனாக வலம் வரும் யஷ் சொத்து மதிப்பு மட்டும் ரூ. 53 கோடி வரை வரும் என கணிக்கப்படுகிறது.

சொத்து மதிப்பு, சம்பளம் என பேசினாலும் யஷ் அவர்களிடம் ஒரு நல்ல விஷயம் இருக்கிறது. அதாவது இல்லாதவர்களுக்கு உதவுவது, வரி கட்டுவது போன்ற விஷயங்களில் இவர் அனைவருக்கும் ஒரு உதாரணம்  என்கின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here