விக்னேஷ் சிவன் பெரிய சவால்களுக்கு இடையில் இயக்கியுள்ள திரைப்படம் காத்து வாக்குல ரெண்டு காதல்.

இது ஏன் சவாலான படம் என்றால் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நாயகிகளான நயன்தாரா மற்றும் சமந்தாவை வைத்து படம் இயக்கியுள்ளார். இவர்களுடன் தமிழ் மக்கள் கொண்டாடும் விஜய் சேதுபதி வேறு உள்ளார்.

படத்தின் வசூல்

கடந்த ஏப்ரல் 28ம் தேதி படம் ரிலீஸ் ஆனது, மக்கள் படத்தை நல்ல முறையில் கொண்டாடி வருகிறார்கள்.  3வது நாளே படம் நல்ல ஹிட்டடிக்க படக்குழு தேவி திரையரங்கிற்கு சென்று ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்தார்கள்.

அங்கேயே கேக் வெட்டி படத்தின் வெற்றியை கொண்டாடினார்கள்.

தற்போது வசூலில் கலக்கிவரும் காத்து வாக்குல ரெண்டு காதல் படம் இதுவரை தமிழகத்தில் மட்டும் ரூ. 23 கோடி வசூலித்துள்ளதாம்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here