கடுப்பான விஜய்யின் ரசிகர்கள்
விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் காத்து வாக்குல ரெண்டு காதல்.
பெரிய எதிர்பார்ப்புகளுடன் திரைக்கு வந்துள்ள இப்படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் தற்போது இப்படத்தை விஜய் ரசிகர்கள் விமர்சித்து பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.
ஆம், ஏன்னென்றால் இப்படத்தின் ஒரு காட்சியில் பிகில் பட முக்கிய காட்சியை ரீ-கிரியேட் செய்துள்ளனர்.
அதில் ரெடின் கிங்ஸ்லி விஜய்யை போல வசனம் பேசி நடித்துள்ளார். படத்திலே பெரிய கரகோஷத்தை உண்டாக்கிய காட்சியை தற்போது விஜய்யின் ரசிகர்களை சிறந்த காட்சியை இப்படி செய்திருக்க கூடாது என பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்