விக்னேஷ் சிவன் வெளியிட்ட பதிவு

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகிய முக்கிய நட்சத்திரங்கள் மூவரும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் காத்து வாக்குல ரெண்டு காதல்.

நேற்று பெரிய எதிர்பார்ப்பிற்கு இடையே வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதே சமயம் இப்படமும் பலரிடமும் கலவையான விமர்சனங்கள் பெறுவதை பார்த்து வருகிறோம்.

இந்நிலையில் தற்போது காத்து வாக்குல ரெண்டு காதல் படத்திற்கு ரசிகர்கள் கொடுத்துள்ள வரவேற்பு குறித்து இயக்குனர் விக்னேஷ் சிவன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் “படத்தின் மிகப்பெரிய வரவேற்புக்கு நன்றி, நீண்ட பல போராட்டங்களுக்குப் பிறகு இப்படத்தை திரையரங்குகளில் கொண்டு வந்ததற்கான பலனை ரசிகர்களின் புன்னகையில் கண்டு மகிழ்கிறேன். அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி” என பதிவிட்டுள்ளார்.

 

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here