பிக் பாஸ் அல்டிமேட் ஷோ சமீபத்தில் தான் நிறைவடைந்தது. முந்தைய சீசன்களை போல இல்லாமல் இந்த புது ஷோ ஓடிடியில் மட்டும் 24 மணி நேரமும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

BB அல்டிமேட்டில் அபிராமி மற்றும் பாலாஜி முருகதாஸ் இருவரும் நெருக்கமாகவே இருந்தனர். அவர்கள் பற்றி பல்வேறு விஷயங்களும் கிசுகிசுக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது அபிராமி இன்ஸ்டாவில் நேரலையில் ரசிகர்களுடன் பேசி இருக்கிறார். அப்போது ஸ்மோக்கிங் ரூமில் பாலா உடன் என்ன நடந்தது? என கேட்டிருக்கிறார்.

‘எதுவுமே நடக்கவில்லை’ என அபிராமி அதற்க்கு விளக்கம் கொடுத்து இருக்கிறார். “எதுவும் நடக்கல. அது தான் உண்மை. தேசிய சேனலில் எனக்கு ஒருவரை பிடித்து இருக்கிறது என சொன்ன நான் எதையும் தைரியமாக கூறி விடுவேன். மக்கள் 24 மணி நேரமும் பார்க்கும் ஷோவில் அப்படி செய்யக்கூடாது என்கிற இங்கிதம் எல்லோருக்கும் கண்டிப்பாக இருக்கும்’ என அவர் கூறி உள்ளார்.

 

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here