தற்போது இந்திய பாக்ஸ் ஆபிஸில் கேஜிஎப் 2 படம் தான் பாக்ஸ் ஆபிஸில் வசூல் மழையில் நனைத்து கொண்டிருக்கிறது. கன்னடம், தெலுங்கு, தமிழ், மலையாளம் மட்டுமின்றி ஹிந்தியில் பெரிய ஹிட் ஆகி இருக்கிறது.
தமிழ்நாட்டில் விஜய்யின் பீஸ்ட் படத்தை ஓரங்கட்டிவிட்டு நல்ல வசூல் ஈட்டிக்கொண்டிருக்கிறது இந்த படம்.
நான் விஜய் ரசிகை: ஸ்ரீநிதி ஷெட்டி
கேஜிஎப் படத்தில் ஹீரோயினாக நடித்து ரசிகர்களை வேகுவாக கவர்ந்திருக்கும் ஸ்ரீநிதி ஷெட்டி சமீபத்தில் அளித்திருக்கும் பேட்டியில் தான் விஜய்யின் ரசிகை என குறிப்பிட்டு இருக்கிறார்.
“பிகில், மாஸ்டர் ஆகிய படங்களை நான் தியேட்டரில் தான் பார்த்தேன். பீஸ்ட் படத்தையும் சென்று பார்க்க போகிறேன்” என கூறி உள்ளார் ஸ்ரீநிதி ஷெட்டி.