தமிழ் சினிமா ரசிகர்களால் பெருமையாக கொண்டாடப்படும் ஒரு நடிகை. பல்லாவரத்தில் பிறந்த இவர் சினிமாவில் மாடலிங் துறையில் முதலில் பணியாற்றி இருக்கிறார்.
பின் அதில் கிடைத்த வாய்ப்பு மூலம் படங்களில் நடிக்க ஆரம்பித்த அவர் அடுத்தடுத்து நல்ல கதைகளை தேர்வு செய்து சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார். அதன் மூலம் பல கோடி ரசிகர்களை பெற்றார்.
தமிழை தாண்டி தெலுங்கிலும் நம்பர் 1 நாயகியாக வலம் வரும் சமந்தா இப்போது பாலிவுட், ஹாலிவுட் எனவும் கவனம் செலுத்தி வருகிறார்.
பட ரிலீஸ்
இன்று நடிகை சமந்தாவிற்கு பிறந்தநாள், அதேநேரம் அவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடித்துள்ள காத்து வாக்குல ரெண்டு காதல் படமும் ரிலீஸ் ஆகியுள்ளது. படத்தில் சமந்தாவின் வேடத்திற்கு நல்ல பாராட்டுக்கள் கிடைத்து வருகிறது.
நயன்தாரா வேடத்தை விட சமந்தாவின் கதாபாத்திரம் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படுகிறது. அதேபோல் தெலுங்கில் பிரம்மாண்டமாக தயாராகும் ஷகுந்தலம் என்ற படத்தில் சமந்தா நடிக்க அப்படக்குழுவினர் ஸ்பெஷல் போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளனர்.
பிறந்தநாள் கொண்டாட்டம்
பட ரிலீஸ் ஒருபக்கம் இருக்க சமந்தாவிற்கு இன்று பிறந்தநாள். அவர் தனது சொந்த தொழில் பணியாளர்களுடன் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.