டிடி என்கிற திவ்யதர்ஷினி

விஜய் தொலைக்காட்சியில் தனது பள்ளி பருவத்தில் இருந்து இன்று தொகுப்பாளராக பணிபுரிந்து வருபவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி.

இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாய்ஸ் Vs கேல்ஸ், ஜோடி நம்பர் 1, சூப்பர் சிங்கர் போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார்.

ஆனால், இவருக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அடையாளத்தை பெற்று தந்த நிகழ்ச்சி என்றால், அது கோப்பி வித் டிடி நிகழ்ச்சி தான்.

விஜய் டிவியின் மாபெரும் வெற்றியடைந்த நிகழ்ச்சிகளில் ஒன்று கோப்பி வித் டிடி. இதனை தொடர்ந்து அச்சம் தவீர், அன்புடன் டிடி, என்கிட்ட மோததே, ஸ்பீட் கெட் செட் கோ என பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார்.

டிடி வாங்கும் சம்பளம்

 

ஆனால், தற்போது முன்பு போல் இல்லாமல் குறிப்பிட்ட முக்கிய விஜய் டிவி நிகழ்ச்சிகளை மட்டுமே தொகுத்து வழங்குகிறார் டிடி.

இந்நிலையில், தொகுப்பாளினி டிடி ஒரு எபிசோடிற்கு ரூ. 3 முதல் 4 லட்சம் வரை சம்பளம் வாங்கி வருவதாக தகவல் கூறப்படுகிறது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here