தளபதி விஜய்
நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவர். இவர் நடிப்பில் சமீபத்தில் பீஸ்ட் திரைப்படம் வெளிவந்தது.
இப்படம் ரசிகர்களின் முழு எதிர்பார்ப்பையும் பூர்த்திசெய்ய தவறியுள்ளது. இதனால், விஜய்யின் திரைவாழ்க்கையில் இப்படம் தோல்வியாக அமைந்துள்ளது.
விஜய்க்கு ஆஸ்கர் கிடைத்தால்
இந்நிலையில், பிரபல மூத்த தமிழ் சினிமா தயாரிப்பாளர் அபிராமி ராமநாதன் விஜய் குறித்து பேசியுள்ளார்.
அதில் ” விஜய்யின் உழைப்பின் மேல் நம்பிக்கை இருக்கிறது. அவர் படம் நல்லாயில்லா விட்டாலும் மக்கள் அதனை ரசிகின்றனர். ஆஸ்கருக்கு போகக்கூடிய அளவிற்கு அவருக்கு திறமை இருக்கிறது. விஜய்க்கு ஆஸ்கர் கிடைத்தால் தமிழுக்கு பெருமைதானே ” என்று கூறியுள்ளார்.
நடிகர் விஜய்க்கு ஆஸ்கர் கிடைத்தால் பெருமைதானே என்று தயாரிப்பாளர் அபிராமி ராமநாதனின் பேசியுள்ளது ரசிகர்கள் மத்தியில் வைரலாகியுள்ளது.