பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி உலகளவில் வெளிவந்த திரைப்படம் கே.ஜி.எப் 2.
முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து மாபெரும் எதிர்பார்ப்பில் இப்படம் வெளிவந்தது. அதே போல் ரசிகர்களின் முழு எதிர்பார்ப்பையும் இப்படம் பூர்த்தி செய்தது.
கே.ஜி.எப் 2 வசூல்
வசூலில் முதல் நாள் மட்டுமே உலகளவில் சுமார் ரூ. 140 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது.
தொடர்ந்து பாகுபலி 1 படத்தின் ரூ. 650 கோடி வசூலை அசால்ட்டாக முறியடித்து தற்போது ரூ. 900 கோடி வசூல் செய்துள்ளது கே.ஜி.எப் 2.
ரூ. 900 கோடி பாக்ஸ் ஆபிஸ் வசூலை தொடர்ந்து தற்போது ரூ. 1000 கோடி வசூலை நோக்கிய இப்படம் நகர்ந்துள்ளது.
சாதனையை முறியடிப்பாரா ராக்கி பாய்
இந்நிலையில், வெற்றிகரமாக உலகளவில் ஓடிக்கொண்டிருக்கும் கே.ஜி.எப் 2 திரைப்படம் பாகுபலி 2 படத்தின் ரூ. 1,800 கோடி வசூல் சாதனையை முடியடிக்குமா என்று சமூக வலைத்தளத்தில் பேச்சு எழுந்துள்ளது.
பொறுத்திருந்து பார்ப்போம், பாகுபலி 2 வசூல் சாதனையை ராக்கி பாய் முறியடிக்கிறாரா, இல்லையா என்று..