சன் பிக்சர்ஸ் தயாரிக்க படு பிரம்மாண்டமாக கடந்த ஏப்ரல் 13ம் தேதி வெளியான திரைப்படம் பீஸ்ட். விஜய், பூஜா ஹெட்ச், செல்வராகவன், யோகி பாபு, கணேஷ் என பெரிய நடிகர்கள் பட்டாளமே படத்தில் நடித்துள்ளார்கள்.
எல்லா விஷயங்களும் சூப்பராக இருந்தாலும் கதை கொஞ்சம் சொதப்ப மக்கள் படத்திற்கு சரியான வரவேற்பு கொடுக்கவில்லை, நாளுக்கு நாள் வசூலிலும் டல் அடித்து வருகிறது.
இதுவரை வசூலிக்கிற்து என்றால் அது விஜய்யின் என்ற மனிதருக்காக தான் என்று சொல்லலாம்.
பீஸ்ட் பாடல் செய்த சாதனை
இப்படத்தின் புரொமோஷனாக முதலில் வெளிவந்தது அரபிக் குத்து என்ற பாடலின் டீஸர் தான். தற்போது இந்த பாடல் தென்னிந்தியாவில் பெரிய சாதனை செய்துள்ளது.
அது என்னவென்றால் யூடியூபில் 6 மில்லியன் லைக்குகளும், 375 மில்லியன் வியூஸ்களும் பெற்று தென்னிந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளது விஜய்யின் அரபிக்குத்து பாடல். இந்த சாதனையை ரசிகர்கள் டுவிட்டரில் டாக்குகள் கிரியேட் செய்து கொண்டாடுகிறார்கள்.