விஜய் திரைப்பயணத்தில் இதுவரை 65 படங்கள் வெளியாகிவிட்டது. அவர் நடிப்பில் வெளியான எல்லா படங்களுமே ஹிட் என்று கூற முடியாது.
சில படங்கள் செம ஹிட், சில சுத்தமாக நஷ்டத்தை சந்தித்திருக்கும், அப்படி எல்லா நடிகர்களின் திரைப்பயணத்திலும் ஏற்றம்-இறக்கம் இருக்கும். தற்போது விஜய்க்கு பீஸ்ட் படமும் தோல்வி படம் என்ற லிஸ்டில் வந்துள்ளது.
படத்தின் சென்னை வசூல்
சென்னையில் எப்போதுமே விஜய்யின் படங்கள் புதுபுது சாதனைகளை நிகழ்த்தும். ஆனால் பீஸ்ட் திரைப்படம் சரியான கலெக்ஷன் பெறவில்லை, அவரது முந்தைய படங்கள் செய்த வசூல் சாதனையை கூட பீஸ்ட் படம் எட்டவில்லை.
6வது நாளில் அதாவது நேற்று படம் சென்னையில் வெறும் ரூ. 36 லட்சம் மட்டுமே வசூலித்துள்ளது.
6 நாட்கள் முடிவில் மொத்தமாக படம் ரூ. 8.03 கோடி வரை வசூலித்திருக்கிறது. 70% படத்தின் வசூல் அப்படியே குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.